Lifestyleஅரசியல்கல்விசெய்திகள்தமிழகம்மாநிலம்வரலாறு

கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாள்

காமராசர் பிறந்த நாள் 

காமராசர் Kamaraj, 15 சூலை 1903 – 2 அக்டோபர் 1975),
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார்.

1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார். அப்பொழுது லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் இந்தியத் தலைமையமைச்சர் பதவிக்கு உயர்த்தப்படுவதற்குக் காரணமாக இருந்தார். இதன் காரணமாக 1960-களின் இந்திய அரசியலில் இவர் “கிங்மேக்கர்” (அரசர்களை உருவாக்குபவர்) என்று அழைக்கப்பட்டார். பின்னர், இவர் நிறுவன காங்கிரசு கட்சியின் நிறுவனராகவும் தலைவராகவும் இருந்தார்.

இவர் 1920-களில் இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இச் செயற்பாடுகள் காரணமாக பிரித்தானிய அரசால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். 1937-இல், காமராசர் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1942-இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது மூன்று ஆண்டுகள் சிறையிலிடப்பட்டார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு, காமராசர் 1952 முதல் 1954 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். பின்னர் ஏப்ரல் 1954-இல் சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை ஏற்றார். ஏறக்குறைய பத்தாண்டுகள் முதலமைச்சராக இருந்த இவர், மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், ஏழைகள், பின்தங்கியவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றினார். குழந்தைகளுக்கு இலவசக் கல்வி தந்ததோடு அவர்களுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். இவர் தமிழகத்தில் கல்வியை மேம்படுத்துவதில் ஆற்றிய பங்கின் காரணமாக கல்வித் தந்தை என்று பரவலாக அறியப்படுகிறார்.
காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் கருப்பு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர், கர்மவீரர் என்று புகழப்படுகிறார். காமராசரின் மறைவுக்குப் பின், 1976-இல் இந்திய அரசு இவருக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்கிச் சிறப்பித்தது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையம் தொடங்கி பல தெருக்களுக்கும் கட்டிடங்களுக்கும் காமராசர் பெயரைச் சூட்டிச் சிறப்பித்துள்ளார்கள்.

இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை நடைமுறைப்படுத்தியபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இக்காலகட்டத்தில், இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட பல தலைவர்களை அரசு கைது செய்தது.

காமராசர் இந்திராவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த குறையும் கவலையும் கொண்டிருந்தார். 1975-ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி, மதிய உணவுக்குப் பிறகு காமராசருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. 72 வயதில் மாரடைப்பு காரணமாக தூக்கத்தில் உயிர் பிரிந்தது. காமராசரின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக இராசாசி மண்டபத்தில் வைக்கப்பட்டது. மறுநாள், காந்தி மண்டபத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் எரியூட்டப்பட்டது.

காமராசரைச் சிறப்பிக்கும் வகையில் சென்னை, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நினைவுச் சின்னங்கள் நிறுவப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்