குற்றம்செய்திகள்தமிழகம்

அமைச்சர் பெயரில் போலி ஈமெயில்… ரூ.8 கோடி மோசடி முயற்சி!

அமைச்சர் பதவி வாங்கித் தருவதாக கூறி பணம் பெற முயன்றதாக போலீஸ் விசாரணை

அமைச்சர் பெயரில் போலி ஈமெயில்… ரூ.8 கோடி மோசடி முயற்சி!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெயரில் போலி ஈமெயில்! ரூ.8 கோடி பேரம் – 2 பேர் கைது

தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பெயரை பயன்படுத்தி மோசடி செய்ய முயன்றதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர் பெயரில் போலியான மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

theechudar

வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சர் பதவி பெற்றுத் தர முடியும் எனக் கூறி, அதற்காக ரூ.8 கோடி வரை பணம் கேட்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்காக போலி மின்னஞ்சல் மற்றும் WhatsApp தகவல்கள் பயன்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக புகார் கிடைத்ததைத் தொடர்ந்து வில்லிவாக்கம் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

அமைச்சர் பெயரில் போலி ஈமெயில்… ரூ.8 கோடி மோசடி முயற்சி!

விசாரணையின் அடிப்படையில் வேலூரைச் சேர்ந்த ரூபன் ராஜ் மற்றும் சென்னையைச் சேர்ந்த சக்தி அர்ஜுன் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களிடமிருந்து செல்போன்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மோசடி முயற்சியில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
அழகு குறிப்புகள்: முகம் பொலிவாக இருக்க 7 எளிய Skin Care Tips முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக இதசெய்ங்க வங்கி முன் எலும்புக்கூடு Odisha அதிர்ச்சி சம்பவம்! பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி | Muslim Style Chicken Biryani Tamil டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி