
உலக விமானப் போக்குவரத்து புதிய சாதனை!
உலக விமானப் போக்குவரத்தில் புதிய சாதனை: 2026ல் 5.2 பில்லியன் பயணிகள் பயணம் செய்வார்கள்
2026ஆம் ஆண்டில் உலக விமானப் போக்குவரத்து துறை சுமார் 5.2 பில்லியன் பயணிகளுக்கு சேவை வழங்கும் என சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.

விமானப் போக்குவரத்துடன் தொடர்புடைய உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகள் இந்த ஆண்டு சுமார் 4.1 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத் துறை நேரடியாகவும் மறைமுகமாகவும் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கு ஆதரவாக உள்ளது.
விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், சரக்கு விமானப் போக்குவரத்தும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

2026ஆம் ஆண்டில் சுமார் 71.6 மில்லியன் மெட்ரிக் டன் விமான சரக்கு கையாளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா, வர்த்தகம் மற்றும் சர்வதேச தொழில் நடவடிக்கைகளின் வளர்ச்சியுடன் விமானத் துறையும் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.
உலக பொருளாதாரத்தில் விமானப் போக்குவரத்தின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது இந்த புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.





