
TNSTC-ல் 1,518 வேலைவாய்ப்பு! பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
TNSTC-ல் 1,518 வேலைவாய்ப்பு! பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்கள் ஆகஸ்ட் 28 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இணைந்து 2026–27ஆம் ஆண்டுக்கான Apprentice பயிற்சி வாய்ப்புகளை அறிவித்துள்ளன. மொத்தம் 1,518 பயிற்சி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வேலை தேடும் இளைஞர்களிடம் இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.
இந்த வாய்ப்புகளில் Engineering Graduate Apprentice பிரிவில் 457 இடங்களும், Diploma Engineering Apprentice பிரிவில் 438 இடங்களும், Non-Engineering Graduate Apprentice பிரிவில் 623 இடங்களும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் பொறியியல் மற்றும் கலை, அறிவியல், வணிகம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை முடித்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.
B.E., B.Tech முடித்தவர்கள் தொடர்புடைய Engineering Apprentice பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். Diploma முடித்தவர்களுக்கு Technician Apprentice வாய்ப்பும், BA, B.Sc, B.Com, BBA, BBM, BCA போன்ற பட்டப்படிப்புகளை முடித்தவர்களுக்கு Non-Engineering Graduate Apprentice வாய்ப்பும் உள்ளது.
இந்த பயிற்சிக்கான விண்ணப்ப செயல்முறை 28 ஜூலை 2026 முதல் தொடங்கியுள்ளது. கடைசி நாள் 28 ஆகஸ்ட் 2026 என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியுள்ளவர்கள் கடைசி நாளை எதிர்பார்க்காமல் முன்கூட்டியே விண்ணப்பிப்பது நல்லது.

இந்த Apprentice தேர்வில் வழக்கமான எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் இல்லாமல், கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் முதற்கட்ட தேர்வு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
Graduate Apprentice-களுக்கு மாதம் ₹12,300 வரையிலும், Diploma Technician Apprentice-களுக்கு மாதம் ₹10,900 வரையிலும் stipend வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிரந்தர அரசு பணி அல்ல; ஒரு வருட Apprentice பயிற்சி வாய்ப்பு என்பதை விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் படித்து முடித்த இளைஞர்களுக்கு அரசு போக்குவரத்துத் துறையில் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை அனுபவத்தை பெற இந்த வாய்ப்பு பயன்படலாம். விண்ணப்பிக்கும் முன் தகுதி, வயது, தேர்வு முறை மற்றும் தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்ப்பது அவசியம்.





