தமிழக அமைச்சர்களுக்கு எந்த தகுதியும் இல்லாதவர்கள்:- அண்ணாமலை விமர்சனம்

Unknown
By -
0

திருச்சியில், தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்திடவும், ஐந்தாம் வகுப்பு வரை, தமிழ் மொழியினைக் கட்டாயமாக்கிட வலியுறுத்தியும், தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வியை வழங்க மறுக்கும் திமுக அரசைக் கண்டித்தும் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றோம்.

சுதந்திர இந்தியாவில், இதுவரை இரண்டு முறை, புதிய கல்விக் கொள்கைகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. காலத்துக்கேற்ப கல்விக் கொள்கையில் மாற்றம் வேண்டும் என்பதற்காக, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், இஸ்ரோவின் தலைவராக இருந்த ஐயா திரு. கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைத்த குழு உருவாக்கியதே, தற்போது கொண்டு வரவுள்ள புதிய கல்விக் கொள்கை. இதன் முக்கியமான அம்சம், ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயம் தாய்மொழிக் கல்வி. மூன்றாவது மொழியாக, மாணவர்களுக்கு விருப்பமான ஒரு இந்திய மொழி. ஆனால், திமுக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வந்த கல்விக் கொள்கையின்படி, மூன்றாவது மொழி கட்டாயமாக இந்தி மொழியாக இருந்தது.

தமிழக அமைச்சர்களாக இருப்பவர்கள் பின்னணியைப் பார்த்தால் ஒருவர் கூட, எந்தத் தகுதியும் இல்லாதவர்கள்தான். ( வீடியோ: https://youtu.be/8lpVW9AwwrY?si=DnC8zbPLsWO3oTfG ) இவர்கள் அனைவரும், நமது குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். தனியார் பள்ளிகளில் பல மொழிகள் கற்க, மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை, அரசுப் பள்ளிகளில் இலவசமாகக் கிடைப்பதைத் தடுக்கிறார்கள். நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்துள்ள கல்விக் கொள்கை மூலம், நமது குழந்தைகள் விருப்பப்படும் மொழிகளைக் கற்கும் வாய்ப்பு கிடைப்பதோடு, மேல்நிலைப் பள்ளியில், பிரெஞ்ச், ஜெர்மன், ஜப்பான், ஸ்பானிஷ் உள்ளிட்ட உலக மொழிகளையும் அரசுப் பள்ளிகளிலேயே கற்கும் வாய்ப்பை வழங்குகிறது. அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். ஆனால், திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளின் வருமானம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது திமுக அரசு.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

எனவே தான், தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று, தமிழக பாஜக சார்பாக, ஒரு கோடி கையெழுத்துகளை பெறுவோம் என்ற இலக்கோடு சமக்கல்வி கையெழுத்து இயக்கத்தை கடந்த மார்ச் 5 அன்று தொடங்கினோம். நேற்று வரை, 18 நாட்களில், 26 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள், தங்கள் கையெழுத்திட்டு ஆதரவளித்துள்ளனர். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் புரட்சியாகவே இதனைக் காண்கிறோம். இதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழக பாஜக சகோதர சகோதரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, மக்கள் ஆதரவைப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

நேற்று, சென்னையில் இந்தி கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்து திமுக ஒரு கூட்டம் நடத்தியது. தமிழகத்தைக் குப்பைக் கிடங்காக மாற்றும் கேரள மாநில முதலமைச்சர், தமிழகத்துக்குத் தண்ணீர் தராமல் வஞ்சிக்கும் கர்நாடக காங்கிரஸ் துணை முதலமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்திருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின். விகிதாச்சார அடிப்படையில்தான் தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும் என்று, நமது பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் உறுதியளித்த பிறகும், தனது அரசியல் லாபத்துக்காகத் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தமிழக மக்களுக்கு எதிரான இந்த திமுக ஆட்சி வரும் தேர்தலில் நிச்சயம் அகற்றப்படும். தேசிய கல்விக் கொள்கை தமிழகத்தில் நிச்சயம் அமல்படுத்தப்படும். அதற்காக, நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)