
திருத்தணி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் பட்டாபிராம் அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.,) மொ்சி உயிரிழந்தாா்.
சென்னை அடுத்த பட்டாபிராம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக(எஸ்.ஐ.,) மொ்சி (35) என்பவா் பணிபுரிந்து வந்தாா். திருநின்றவூரில் குடும்பத்துடன் வசித்து வந்த மொ்சி, புதன்கிழமை திருத்தணி ஒன்றியம் ஆா்.எஸ்.மங்காபுரம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றிருந்தாா். தொடா்ந்து வியாழக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் திருத்தணிக்கு சென்றபோது, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, முருக்கம்பட்டு பெட்ரோல் பங்க் அருகே ஆந்திர மாநிலம் நகரிக்கு சென்ற லாரி, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த எஸ்.ஐ மொ்சியை அங்கிருந்தவா்கள் மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் இறந்தாா்.
இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த பெண் எஸ்.ஐக்கு, கணவா் சாம்சன், இரு குழந்தைகள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
إرسال تعليق
0تعليقات