செய்திகள்தமிழகம்

கள்ளக்குறிச்சி லா. கூடலூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம். இலவச வீட்டு மனை வழங்கி பொதுமக்களின் கோரிக்கை மனு மீது உடனடி தீர்வு வசந்தம் கார்த்திகேயன் MLA உறுதி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட லா. கூடலூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் என்கின்ற திட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட லா. கூடலூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் என்கின்ற திட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. 24 /07/ 2025 அன்று நடைபெற்ற முகாமில் லா. கூடலூர், கீழ்ப்பாடி , அவுரியூர், ஆகிய மூன்று பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கள்ளக்குறிச்சி (தெற்கு) மாவட்ட திமுக கழக செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் MLA வின் தலைமையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை பொது மக்களின் பார்வையில் நடைபெற்றது.

WhatsApp Image 2025 07 24 at 23.00.43 13973ffd கள்ளக்குறிச்சி லா. கூடலூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம். இலவச வீட்டு மனை வழங்கி பொதுமக்களின் கோரிக்கை மனு மீது உடனடி தீர்வு வசந்தம் கார்த்திகேயன் MLA உறுதி. Theechudar

இதில் பல்வேறு நலத்திட்டங்களான வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் விதவை சான்றிதழ், விதவை உதவி தொகை, மின் இணைப்பு மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் பெயர் சேர்த்தல், ஆதார் அட்டையில் பெயர் திருத்தம், வயது திருத்தம், மகளிர்களுக்கான உரிமைத் தொகை , பட்டா மாற்றம், போன்ற ஏராளமான மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு இம் மனுக்களின் மீது உடனடி தீர்வு காணப் படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதில் மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் 500க்கும் மேல் , பட்டா மாற்றம் செய்ய வேண்டிய மனுக்கள் 360 க்கு மேல் மற்றும் பலகோரிக்கை கொண்ட மனுக்களோடு ஆயிரம் மனுக்களுக்கு மேல் பெறப்பட்டது.

இதையும் படியுங்கள் : 12ம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய மாணவர்கள் இன்று முதல் மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கலாம்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவரும், ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றிய திமுக கழகச் செயலாளருமான எம்.பெருமாள். கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக கழக பொருளாளர் ஆதி. கு. கோவிந்தராஜ். ரிஷிவந்தியம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன் . ஆகியோர் முன்னிலை வகித்தனர். உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் வாணாபுரம் வருவாய் வட்டாட்சி தலைமை அலுவலர் P.வெங்கடேசன். வட்ட வழங்கல் பிரிவு தலைமை அலுவலர் அண்ணாமலை, வட்ட வழங்கல் பிரிவு கார்மேகம். Dt அசிஸ்டன்ட் அன்பு, தனி வட்டாட்சியர் பிரிவு பெரியசாமி, மற்றும் ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி தலைமை அலுவலர்துரைமுருகன் (ரெகுலர் BDO ) ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகந்நாதன் (ஸ்க்கீம் bdo ) துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர் பாபு (மேனேஜர்) ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர் முத்துராமன். ஊரக வளர்ச்சித் துறை ஓவர்சீஸ் சிவக்குமார் .

இதையும் படியுங்கள் : கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு டிரம்ப் மிரட்டல் . இந்தியர்களை வேலைக்கு எடுக்கக்கூடாது; அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை

ஆகிய அரசு ஊழியர்களோடு மேலும் இந்த நிகழ்ச்சியில் . லா. கூடலூர் ஊராட்சி செயலாளர் சண்முகம். ஓசைமணி, வட்டார ஒருங்கிணைப்பாளர் வீரன், லா. கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் கேசவன்,துணை தலைவர் துளசி, அவுரியூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமலை, கீழ்ப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பழனி பழனியம்மாள், மற்றும் ஊராட்சி மன்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சுதா, ஆர். மணிகண்டன், எஸ். சத்தியமூர்த்தி, வினோத், ஆகியோர்களுடன் திமுக , மாவட்ட மற்றும் கிராம நிர்வாகிகள் மேலத்தேனூர் அய்யாசாமி, லா. கூடலூர் சீனிவாசன்.

லாலா பேட்டை முருகன், சேரந்தாங்கல் தங்கவேல், மகளிர் அணி மாரியம்மாள்.கிராம நிர்வாக உதவியாளர்கள், மற்றும் கிராம அளவில் பணி புரியும் சுகாதார ஊக்குனர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், ஏராளமான அரசு பணியாளர்களோடு இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் ‘ உங்களுடன் ஸ்டாலின் ‘ பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

எஸ் சிவலிங்கம்
தீச்சுடர் நிருபர்
ரிஷிவந்தியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்