செய்திகள்தமிழகம்வானிலை

3 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கவாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் [அறிவிப்பு ..

மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை பெய்யகூடும் 

நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

3 மற்றும் 4 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

5 மற்றும் 6 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Spotty thundershowers late today; sticky and stormy late week | MPR News

இதற்கிடையில், இன்று முதல் 2 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கும்

இன்று முதல் 2 ஆம் தேதி வரை, அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை சில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருப்பது தமிழ்நாட்டின் சில இடங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மற்றும் 4 ஆம் தேதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 65 கிமீ வேகத்திலும் புயல் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Articles

Back to top button
டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்