
தமிழ்நாடு
சாத்தூர் பட்டாசு தொழிற்சாலை விபத்து : பலி அனோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
சாத்தூர் பட்டாசு தொழிற்சாலை வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த அழகுராஜா மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 1 ஆம் தேதி காலை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. காலை 8.30 மணியளவில் தொழிலாளர்கள் காம்பவுண்டிங் அறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது இந்த வெடிப்பு நிகழ்ந்தது, இதனால் அருகிலுள்ள 8 அறைகள் இடிந்து விழுந்தன. அப்போது தொழிற்சாலையில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர்.
விபத்துக்குப் பிறகு, சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. விபத்தில் 9 தொழிலாளர்கள் கருகி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அழகுராஜா உயிரிழந்தார். இதன் மூலம், சாத்தூர் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.





