
புவனகிரி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா .மற்றும் கல்வி விழிப்புணர்வு தினவிழா

புவனகிரி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் கல்வி விழிப்புணர்வு தினவிழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வரவேற்புரை பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி சரவண ஜான்சி செய்தார்.தலைமையுரை ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் குணசேகரன் செய்தார்.

வாழ்த்துரை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் தலைவர் அரிமா இரத்தின சுப்பிரமணியன், ஊழல் எதிர்ப்பு இயக்க உறுப்பினர்கள் மணிமாறன், செந்தில்குமார், சுந்தரமூர்த்தி ஜெகன் ஆகியோர் செய்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் கி.கோவிந்தராஜன் அண்ணாமலை பல்கலைக் கழகம் வணிகவியல் துறை தலைவர் ஓய்வு, டாக்டர் உதயசூரியன் வணிக மேலாண்மை துறை தலைவர் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஓய்வு ஆகியோர் கலந்து கொண்டு. மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு உரையாடல் செய்தனர்.சிறப்பு விருந்தினராக மாநிலத்தில் தமிழ் வழி கல்வி மூலம்+2 பொதுத் தேர்வில் 7.5 % இட ஒதுக்கீடு கீழ் முதலிடம் பிடித்த மாணவி V.தரணி கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி கல்வி விழிப்புணர்வு உரையாடல் செய்தார்.
நிகழ்ச்சியில் 18பள்ளி மாணவர்களுக்கு 10 மற்றும்+2 தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 128மாணவர்களுக்கு பாராட்டி ஊக்கத்தொகை, வாழ்த்து மடல்கள் மற்றும் தேசத் தலைவர்கள் நூல்கள் கொடுத்து பிறப்பிக்கப்பட்டது.
மேலும் / மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது.பள்ளியின் நூலகத்திற்கு நூல்கள் மற்றும் அதை வைக்கும் இரண்டு நூல் அலமாரிகள் சமூக ஆர்வலர் உயர் திரு கோ. மாறன் அவர்களால் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் கல்வி மேலாண்மை குழு தலைவர் திருமதி சாந்தி லட்சுமி மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்க உறுப்பினர்கள் , பொருளாளர் வீரபாண்டியன், துணைச் செயலாளர் பன்னீர் செல்வம், பொறியாளர் ராமலிங்கம், திருக்குறள் இயக்க தலைவர் ஆறுமுகம்,நிஜாமுதீன்,முத்துக்குமரன், ரமேஷ் சுந்தர விநாயகம், ஆசிரியர் ஜெய்சங்கர், ஆசிரியர் உதயகுமார் முடிவில் நன்றியுரை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திருமதி செந்தில் வடிவு செய்தார்.



