
வடகிழக்கு பருவமழை & தீபாவளி பட்டாசு பாதுகாப்பு குறித்த அரசு எச்சரிக்கை | கள்ளக்குறிச்சி மாவட்டம் செய்திகள் theechudar
கள்ளக்குறிச்சி 16
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம், பகண்டை கூட் ரோட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், வருகின்ற தீபாவளி கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்று பகண்டை கூட்ரோடு பகுதியில் பொதுமக்கள் முன்னணியில் 16 /10/ 2025 அன்று சில எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தனி துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் தலைமையிலும், வாணாபுரம் வருவாய் வட்டாட்சியர் வெங்கடேசன், பகண்டை கூட்ரோடு காவல் உதவி ஆய்வாளர் சேட்டு, மற்றும் சங்கராபுரம் தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் முன்னிலையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக ஆறுகள் மற்றும் ஏரிகள் மட்டுமல்லாமல் நீர் நிறைந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், பட்டாசுகள் வெடித்து கொண்டாடும்போது தண்ணீர் மற்றும் மணல் தயார் நிலையில் வைத்துக் கொண்டு கொண்டாடும்படியும், வீட்டில் உள்ள பெரியவர்கள் மேற்பார்வையில் மட்டும் சிறியவர்கள் பட்டாசு வெடிகளை பயன்படுத்த வேண்டும் எனவும் கூரை வீடு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய மண்ணெண்ணெய் பெட்ரோல் டீசல் ஆகியவைகளின் அருகில் வெடிபொருட்களை பயன்படுத்தக் கூடாது.
மேலும் எரிபொருளான கேஸ் சிலிண்டர்களில் தீ பரவிடும்போது தண்ணீரில் நினைத்த சணல் சாக்கு மற்றும் ஈரம் கொண்ட கனமான துணிகளால் எரியும் சிலிண்டரின் மீது போட்டு அமுக்கிவிடும்போது தீ பரவாமல் இருக்க இது ஒரு அறிய செயல்முறையாகவும். மேலும் இந்நிகழ்ச்சியில் ஆழ்ந்த தண்ணீரில் ஒருவர் தவறி விழுந்தோரை காப்பாற்ற சிறந்த பயிற்சிகளையும், பொதுமக்களின் முன்னிலையில் ஒரு பயிற்சியாக காண்பிக்கப்பட்டது. எனவே இந்த ஆலோசனை கேட்டு பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்கமும் இதில் கலந்து கொண்டது.
தீச்சுடர் செய்தியாளர்
எஸ். சிவலிங்கம்
ரிஷிவந்தியம்
.






