
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்து பொய்குணம் கிராமத்தில் முனியப்பன் கோவில் அருகே உள்ள குண்று பகுதியில் விவசாயிக்கு ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் சுற்றுவட்ட பாறையில் பெண் மயில் ஒன்று அடிபட்டு கிடந்தது .
வெயில் காலத்தில் தண்ணீர் தேடி மலை பகுதியில் இருந்து கீழே வந்த பெண் மயில் தவறி கிணற்றில் விழுந்தது.
கிணற்றில் விழுந்த மயிலானது தனது வலது காலில் அடிபட்டது.
வலி தாங்க முடியாத அம்மயில் கூச்சலிட்டு கத்தியது .
அச்சமயம் அவ்வழியாக சென்ற இயற்கை பாதுகாப்பு இயக்க நிறுவனரும் , சமூக ஆர்வலருமான தேவபாண்டலத்தை சேர்ந்த சு. சுதாகர் என்பவர் அம்மயிலை மீட்டு சங்கராபுரம் அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று கால்நடை மருத்துவர். பிரின்ஸ் அவர்களின் உதவியால் முதலுதவி அளிக்க பட்டார். பின்னர் கள்ளக்குறிச்சி வனத்துறையினருக்கு தகவல் தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து காயமுற்ற மயிலை மீட்டு கள்ளக்குறிச்சி வன அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாக்கப்பட்டனர்.







