Lifestyleகுற்றம்செய்திகள்தமிழகம்

வத்தலகுண்டு அருகே வாலிபர் கழுத்தை அறுத்து தலையில் கல்லை போட்டு கொலை –

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே வாலிபர் கழுத்தை அறுத்து தலையில் கல்லை போட்டு கொலை 4 பேரைப் பிடித்து விசாரணை.

வத்தலகுண்டுவில் கொலை செய்யப்பட்ட, மதுரை ரவுடி ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த சிவமணி..

மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த சரித்திர
பதிவேடு குற்றவாளி சிவமணி, தனக்கு கீழ் உள்ள ரவுடிகளை இழிவுபடுத்தியதாக கூறப்படுகிறது.

IMG 20250712 WA0112 வத்தலகுண்டு அருகே வாலிபர் கழுத்தை அறுத்து தலையில் கல்லை போட்டு கொலை - Theechudar

ரவுடி சிவமணியை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டிய கூட்டாளிகள் – கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று போதையில் இருந்த சிவமணியை காருக்குள் வைத்து
கத்தியால் கழுத்தை அறுத்து கொலை
வத்தலகுண்டு அருகே மதுரை ரவுடியை கழுத்தை அறுத்து தலையில் கல்லை போட்டு கொலை – 4 ரவுடிகள் கைது.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சிவமணி(35), அருண்பாண்டியன், மணிகண்டன், முனியசாமி, சூர்யா ஆகிய 5 பேர் ரவுடி கும்பல் இவர்கள் 5 பேர் மீதும் பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் உள்ளன இந்நிலையில் இவர்கள் கொடைக்கானல் செல்வதற்காக ஸ்கார்பியோ காரில் வந்து கொண்டிருந்தபோது குடிபோதையில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில்

திண்டுக்கல், வத்தலகுண்டு, மதுரை ரோடு பெட்ரோல் பங்க் அருகே 4 பேர் சேர்ந்து சிவமணியின் கழுத்தை அறுத்து தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலகுண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அருண்பாண்டியன், மணிகண்டன், முனியசாமி, சூர்யா ஆகிய 4 பேரையும் கைது செய்து ஸ்கார்பியோ காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்