
விபத்தில் பலியான பகுதி நேர ஆசிரியருக்குத் தமிழ்நாடு அரசு நிவாரண உதவித் தொகைவழங்க வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும்அறிக்கை.

திருவண்ணாமலை மாவட்டம் வென்னாங்குபட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் திரு. பார்த்தசாரதி அவர்கள் சென்னையில்நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கை போராட்டத்தில் பங்குபெற்று வீடு திரும்பிய போது வாகன விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் சென்ற செய்தி அறிந்து மிகவும் துயரம்அடைந்தேன்.

அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் பகுதிநேரஆசிரியர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரகோரிக்கை நியாயமானது.
திமுக தேர்தல் அறிக்கையிலும் பணி நிரந்தர செய்யப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. பகுதி நேர ஆசிரியர்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இந்த விபத்து நடந்திருப்பது மிகுந்த வேதனைஅளிக்கிறது.
வெறும் 12,500 ஊதியத்தில் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் பகுதி நேர ஆசிரியர்களின் குடும்ப சூழ்நிலை பரிதாபகரமானது. ஆசிரியர் பார்த்தசாரதி அவர்களின்குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து நிவாரணத் தொகைவழங்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
போராடிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றேன்.
இப்படிக்கு.
எம். எச். ஜவாஹிருல்லா
தலைவர் மனிதநேய மக்கள் கட்சி



