செய்திகள்

மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.

எதிர்கால இந்தியா?

மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.

கன்னியாக்குமரி மாவட்டம்.

  தக்கலை, இரணியல் ரோட்டில் அமைந்துள்ள மதுபான கூடத்தில் ஒரு பைக்கில் வந்த மூன்று சிறார்கள் மது அருந்தியுள்ளனர்.

Screenshot 20250718 085540 Gallery மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள். Theechudar

இதை கண்டு அங்கிருந்தவர்கள் இவர்களிடம் விசாரித்தும் திமிராக பேசியும் போதையில் தள்ளாடியுள்ளனர்.

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்களில்) விதிகள் 2003, விதி எண். 11 ஏ-யின் படி, 21 வயது நிரம்பப் பெறாதவர்களுக்கு மது விற்கப்படமாட்டாது என முன்பு அறிவிப்பு பலகை எல்லாம் வைக்கப்பட்டது..

இப்போது இந்த நடைமுறை உண்டா என தெரியவில்லை. டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூட சிறார்களுக்கு மது விறபனை செய்கிறார்கள்.

இப்படி மது குடித்து சீரழியும் சிறார்கள் போதையில் பல குற்ற செயலில் ஈடுபட்ட செய்திகள் அன்றாடம் வருகிறது.

நேற்று கூட சிவகாசி மாவட்டம் – திருத்தங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மதுபோதையில் வந்த பிளஸ் 2 மாணவர்களை தட்டி கேட்ட ஆசிரியர் சுந்தரமூர்த்தியின் மண்டை உடைப்பு;

மது பாட்டிலால் தாக்கிய 4 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை என்ற செய்தி வெளியானது.

அதேபோன்று காவல்துறையினர் கடுமையான வாகன சோதனைகள் இட்டும், அவர்களுக்கு டிமிக்கி கொடுத்து மதுபோதையில் பைக் ஓட்டி விபத்தாகி உயிரிழப்பும் ஏற்படும் வருந்ததக்க செய்திகளை காணுகிறோம்.

சமூக பொறுப்பு அனைவருக்கும் வரவேண்டும், டாஸ்மாக்கில் சிறார்களுக்கு மது விற்பனை செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மது பார்களில் சிறுவர்களை அனுமதிக்க கூடாது. மீறி அனுமதிக்கும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button