
திமுக மீது அதிமுக வழக்கும் அட்டகாசமான தீர்ப்பும்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பெயரை எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் மனு தாக்கல் செய்த அதிமுகவிற்கு தற்பொழுது கிடைத்திருப்பது மிகப்பெரிய தோல்வி.
எந்த அளவிற்கு என்றால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை நீங்கள் ஏன் எதிர்க்கவில்லை என நீதிபதிகள் கேட்கும் அளவிற்கு தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி
உச்ச நீதிமன்றம் உத்தரவு.
மனுதாரர் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வீ.சண்முகத்துக்கு 10 லட்சம் அபராதம் விதிப்பு.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
சிவி சண்முகம் செலுத்தும் அபராத தொகை 10 லட்சம் ரூபாயை மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை ரூ.10 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
அதிமுக எம்.பி-க்கு அபராதம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.
‘உங்களுடன் ஸ்டாலின்’ உள்ளிட்ட அரசின் திட்டங்களில் முதலமைச்சரின் பெயரைப் பயன்படுத்துவதற்கு எதிராக சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு.
.
தற்போது சட்டரீதியாக திமுகவிடம் மீண்டும் ஒரு மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளது அதிமுக.
சி.வி.சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எச்சரிக்கை
“ஒரு வாரத்திற்குள் சி.வி.சண்முகம் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்” என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட அரசுத் திட்டங்களில் முதலமைச்சர் பெயரை பயன்படுத்துவதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்.
“அரசியல் சண்டைக்கு இதுதான் இடமா?” -உச்சநீதிமன்றம்.
உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட அரசுத் திட்டங்களில் முதலமைச்சர் பெயரை பயன்படுத்துவதற்கு எதிராக அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்.
இதுதான் இடமா?
“சட்டத்தை தவறாக புரிந்துகொண்டு சி.வி.சண்முகம் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அரசியல் பிரச்னைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வராதீர்கள்.
அரசியல் சண்டைக்கு இதுதான் இடமா?.
குறிப்பிட்ட ஒரு ஆட்சியின் திட்டத்தை மட்டும் எதிர்க்கும் உங்களது நோக்கம் உள்நோக்கம் கொண்டது” என பி.ஆர்.கவாய், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார்.
.
“சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் ரொம்ப அதிகம்” என தராசு ஷ்யாம், பத்திரிகையாளர் கூறி னார்.
இது அரசியல் நோக்கில் தொடரப்பட்ட வழக்கு!
“அதிமுக ஆட்சியின் போது 25 திட்டங்கள் புரட்சி தலைவர், அம்மா ஆகிய பெயர்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக வழக்கு தொடர்ந்த சி.வி.சண்முகம் அமைச்சராக இருந்த காலத்தில், 22 திட்டங்கள் அப்போதைய முதலமைச்சர் பெயரில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இதேபோன்ற முதலமைச்சர் பெயரிலான திட்டங்கள் உள்ளன.
இது அரசியல் நோக்கில் தொடரப்பட்ட வழக்காகும்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசு வாதம்!.
தமிழ்நாடு அரசுக்கு எதிராக அதிமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது என திமுக தரப்பில் தெரிவித்த உடன் அப்படி என்றால் அபராத தொகையை 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்துங்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
பிறகு அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் என்ன 20 லட்சம் ரூபாய் போடட்டுமா என தலைமை நீதிபதி சிரித்தபடியே கேட்டார்.
அதிமுக தரப்பு வழக்கறிஞரின் முகபாவனை உடனடியாக மாறியது அதை புரிந்து கொண்ட தலைமை நீதிபதி அபராத தொகையை 10 லட்சம் ரூபாயாக நிர்ணயித்து உத்தரவிட்டார்.
“ரூ.10 லட்சம் அபராதம் போடவா? இல்ல..
ரூ.20 லட்சமா உயர்த்தவா?”.
சி.வி.சண்முகம் தரப்பு வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்றம் காட்டம்.
“ரூ.10 லட்சம் போடவா?.
ரூ.20 லட்சமா உயர்த்தவா?”.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட பெயருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து அபராதம் விதித்தபோது குறுக்கிட்ட சி.வி.சண்முகம் தரப்பு வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் காட்டம்.
அம்மா என்பது….
அம்மா என்பது யாருடைய தனிப்பட்ட நபர்களின் பெயர் கிடையாது அது ஒரு பொதுவான பெயர் என அதிமுக தரப்பில் வாதங்களை முன்வைத்த போது ஆமாம் ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்.
தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் அம்மாவாக இருக்கலாம் என சிரித்தபடியே பதில் கூறினர்.
அப்போது திமுக வழக்கறிஞர் வில்சன் குறுக்கிட முயன்ற போது நீங்கள் பேசிக் கொண்டிருந்தபோது அதிமுக வழக்கறிஞர்களை குறுக்கிட கூடாது என நாங்கள் சொன்னோம்.
அந்த விஷயத்தை நீங்களும் கடைபிடிக்க வேண்டும் என நினைக்கிறோம் என கூறினார் இதனை அடுத்து இனி அப்படி செய்ய மாட்டேன் என வில்சன் அவர்கள் தெரிவித்தார்.





