
காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ். கிருபானந்தன் தலைமையில், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு புத்தாடைகள், மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் தொழிலாளர் தினமாக வழக்கத்திற்கு ஏற்ப மே மாதம் ஒன்னாம் தேதி அன்று கொண்டாடப்படுவது வழக்கம். இதன் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் தினத்தை மே மாதம் 01/05/2026 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் கரையாம்பாளையம் கிராமத்தில் தூய்மை பணியாளர்களாக பணி புரியும் பெண் தூய்மை பணியாளர்களுக்கு சேலைகள் இனிப்புகள், மற்றும் ஆண் தூய்மையாளர்களுக்கு, கைலி , துண்டு மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
இவைகள் ரிஷிவந்தியம் ஒன்றியம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் எஸ்.கிருபானந்தம் தலைமையில் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் ரிஷிவந்தியம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் த.அப்பா ராசு, துணைத் தலைவர் அ. குப்புசாமி, மற்றும் ரிஷிவந்தியம் வட்டார செயலாளர் V. அபிலாஷ், நகர தலைவர் அண்ணா. இராதாகிருஷ்ணன், மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் ஆர். பன்னீர்செல்வம், வட்டார பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி, பஞ்சாயத்து செயலாளர் கருந்தான்,
மகிலா காங்கிரஸ் நிர்வாகி கு. அனுசுயா , ஆகியோர்கள் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கரையாம்பாளையம் கிராமத்தில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இலவச சேலை மற்றும் கைலி துண்டு இனிப்புகள் வழங்கிய ரிஷிவந்தியம் காங்கிரஸ் கட்சி உள்ளங்களுக்கும், ரிஷிவந்தியம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ். கிருபானந்தம் ஆகியோர்களுக்கு நன்றி கூறி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
S. சிவலிங்கம்
மதராசபட்டினம்
தீச்சுடர் செய்தியாளர்
ரிஷிவந்தியம்





