சென்னை
ஓய்-ஹேமா வந்தனா
சென்னை: மும்பையில் கணவன்-மனைவி இடையே நடந்த குடும்பத் தகராறு வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் தற்போது மிக முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது.. இந்த அதிரடி தீர்ப்பு அனைத்து கணவர்களுக்கும் முக்கியமான எச்சரிக்கை.. திருமண பந்தத்தில் மனைவிக்கு உரிமையை நிலைநாட்டும் இந்த வழக்கின் பின்னணி என்ன? பரபரப்பு தீர்ப்பின் முழு விவரம் என்ன? இங்கே சுருக்கமாகப் பார்ப்போம்.
கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடியில், கணவர் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

பணிப்பெண், மனைவி
இந்த 2 காரணங்களால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறிய அவர், இதெல்லாம் திருமணச் சட்டத்தின் கீழ் நடக்கும் சட்டக் கொடுமைக்கு சமம் என்றும் விவாகரத்து கோரினார்.
ஆனால் மனைவி கோர்ட்டில் முற்றிலும் மாறுபட்ட வேதனையான தகவலை தெரிவித்தார்.. பாத்திரம் கழுவுதல், வீட்டை சுத்தம் செய்தல், சமையல் செய்தல்.. உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளையும் கட்டாயப்படுத்துவதாக மனைவி தொடர் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி வீட்டில் மிச்சம் இருக்கும் உணவையே தினமும் சாப்பிட வற்புறுத்துவதாக நீதிமன்றத்தில் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு.. ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் 2010ல் தம்பதிக்கு விவாகரத்து வழங்கியது.. ஆனால் அந்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க குடும்ப நல நீதிமன்றம் முற்றிலும் மறுத்துவிட்டது.
நீதிபதி, பம்பாய் உயர்நீதிமன்றம்
குடும்ப நல நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து பாம்பே உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.. இந்த வழக்கை பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பார்தி டாங்ரே மற்றும் மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று மிகவும் தீவிரமாக விசாரித்தது.
வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதிகள், குடும்ப நல நீதிமன்ற தீர்ப்பின் காரணங்களும் அணுகுமுறையும் மிகவும் பலவீனமாக உள்ளதாக மறைமுகமாக சுட்டிக் காட்டி, ஏற்கனவே பிறப்பித்த விவாகரத்து உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.. மேலும் இந்த வழக்கில் கணவர்களை எச்சரிக்கும் வகையில் நீதிபதிகள் பல்வேறு முக்கிய கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
வேலைக்காரன் – மனைவி
திருமணம் என்பது 2 சமமான நபர்களின் கூட்டணி.. இது சேவை ஒப்பந்தம் அல்ல.. எனவே மனைவியை வீட்டு வேலைக்காரியாக கருத முடியாது.. சமையல், வீட்டை சுத்தம் செய்தல் போன்ற வீட்டு வேலைகளை பெண் செய்யத் தவறியதால் கணவனை மனக் கொடுமையாக கருத முடியாது என நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
மனைவி வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று கணவன் எதிர்பார்க்கக் கூடாது. திருமண வாழ்க்கையின் சாதாரண தேய்மானம் மற்றும் திருமணத்தின் ஆரம்ப நாட்களில் சாதாரண கருத்து வேறுபாடுகள் ஆகியவை சட்டரீதியான கொடுமையின் குற்றச்சாட்டுகளாக ஒருபோதும் பெரிதுபடுத்தப்படக்கூடாது.
ஒரு நபருக்கு அவமானம் மற்றும் கடுமையான உணர்ச்சி வலியை ஏற்படுத்தும் மற்றும் திருமண உறவைத் தொடர முடியாத நிலையை உருவாக்கும் கடுமையான நடத்தை மட்டுமே கொடுமையாக கருதப்படும் என்று நீதிபதிகள் இந்த தீர்ப்பில் மேற்கோள் காட்டினர்.
தெளிவுபடுத்திய நீதிபதிகள்
மேலும் விவாகரத்து வழக்குகளில் மனக் கொடுமை என்றால் என்ன என்பதையும் மிக எளிமையாக விளக்கிய நீதிபதிகள்.. ஒருவரை அவமானப்படுத்தி, கடுமையான மன வேதனையை அளித்து, திருமண வாழ்க்கையை தொடர முடியாத நிலைதான் உண்மையான கொடுமை..
வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்தல், நான்கு பேர் முன்னிலையில் அவமானப்படுத்துதல், இல்லாத பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துதல் அல்லது பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தை தடை செய்தல் போன்றவை மனக் கொடுமைக்கு மிக முக்கியக் காரணம் என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பது பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Source link
