தமிழகம்செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டாட்சியில் வட்ட வழங்கல் பிரிவில் குடும்ப அட்டை குறைதீர் முகாம்.

வாணாபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் பிரிவில் பொதுமக்களின் நலன் கருதி மாதந்தோறும் பிரதி மாதம் இரண்டாம் சனிக்கிழமை குடும்ப அட்டை குறைதீர் முகாம் நடைபெற்று வருவது வழக்கமாக இருக்கும் நிலையில், இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் இரண்டாம் சனிக்கிழமை 2025 ஆம் ஆண்டிற்கான குடும்ப அட்டை குறைதீர் முகாம் வாணாபுரம் வரவாய் வட்டாட்சியர் ஆணைக்கிணங்க, குடும்ப அட்டை வட்ட வழங்கல் பிரிவில் பணி புரியும் வட்ட வழங்கல் அலுவலர் எஸ்.அண்ணாமலை தலைமையில் 12 /0 7/ 2025 அன்று முகாம் நடைபெற்றது.

இம் முகாமில் பொதுமக்களின் மொத்த மணுக்கள் 35 மனுக்கள் பெறப்பட்டது. மேலும் இந்த 35 மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது. இதன் வகைகளான, தொலைபேசி எண் மாற்றம் 12 , குடும்ப உறுப்பினர் நீக்கம், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் 17 , மேலும் குடும்ப அட்டை தலைவர் மாற்றம் , உறுப்பினர் பெயர் திருத்தம் 3, நகல் குடும்ப அட்டை 3 , போன்ற வகையான மனுக்களின் குறைகள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் இந்நிகழ்ச்சியில் குடும்ப அட்டை வட்ட வழங்கல் பிரிவுஅலுவலர் s2 G. பழனி, இளநிலை வருவாய் ஆய்வாளர் A.கார்மேகன் மேலும் தனி வருவாய் ஆய்வாளர்கள், ஆகியோர்களுடன் பொதுமக்களுடன் முகாம் சிறப்புடன் நடைபெற்றது.

தீச்சுடர் செய்தியாளர்
எஸ். சிவலிங்கம்.
ரிஷிவந்தியம்.

Related Articles

Back to top button
டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்