அரசியல்செய்திகள்தமிழகம்மாநிலம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதிக்கு உட்பட்ட திருவேற்காடு நகராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் அடித்த போஸ்டரால் பரபரப்பு.

அரசியல் யுத்தம் ஆரம்பமானது

மக்களின் குரலும் மகேசனின் குரலும்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதிக்கு உட்பட்ட திருவேற்காடு நகராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் அடித்த போஸ்டரால் பரபரப்பு.

பாட்டாளி மக்கள் கட்சி குடும்ப சண்டை உலகறிந்ததே.

இதில் மண்டை உடைவதென்னவோ தொண்டர்களோடது.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் மூச்சுக்கு பிறகு அந்த இடத்தில் அமரப்போவது அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் என்பது பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் மன நிலை.

அதற்கு முன்னரே பதவியை பிடிக்க வேண்டும் என்று பிள்ளையும், முடியாது நானே ராஜா நானே மந்திரி என தந்தையும் மாறி மாறி பதவியை சின்னாபின்னமாக்கியதால், பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதில் அன்புமணி ராமதாஸ் பக்கம் செல்வோரை ராமதாஸ் அவர்களால் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்படுகின்றனர்.

மதில் மேல் பூனையாய் தொண்டர்கள் யாது செய்வது என தெரியாமல் அங்கிட்டு ஒரு குத்து இங்கிட்டு ஒரு குத்து என்பது போல இரண்டு பிரிவுக்கும் தாவி தாவி சோர்ந்துவிட்டனர்.

குடுமி சண்டை குடும்ப சண்டையாகி நடுத்தெருவுக்கு வந்து நாறிக்கொண்டிருக்கும் அதே வேலையில்….

ராமதாஸ் தனது மகன் எனது பெயரை பயன் படுத்தக்கூடாது வேண்டுமானால் எனது பெயரின் முதல் எழுத்தை மட்டும் பயன்படுத்தலாம் என வாரிசுரிமைக்கு மட்டுமே ஒப்புதல் அளித்தார். பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களோ அதை ஏற்கும் மன நிலையில் இல்லாததால் அன்புமணி ஆதரவாளர்கள் தங்களது சுவரொட்டிகளில் ராமதாசின் படத்தையும் போட்டு நாங்கள் நடுநிலையாளர்கள் என நிருபித்து வருகின்றனர். அதற்கு திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதி திருவேற்காடு நகராட்சி பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் ஒட்டிய சுவரொட்டி விளம்பரமே சாட்சி.

மக்கள் குரலே மகேசன் குரல் என்பதை ராமதாசும் அன்புமணியும் புரிந்துக்கொண்டு நடந்தால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிர்காலம் நீடிக்கலாம். இல்லாவிட்டால் எற்கனவே பலமற்ற கட்சி இன்னும் பலவீனமான கட்சியாகி கூட்டணி கூட்டாளி கிடைக்காமல் துறவி கட்சியாய் தூர ஒதுக்கப்பட்ட கட்சியாகலாம் என தொண்டர்கள் அஞ்சுகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சி இரட்டை தலைவர்கள் தங்களது அரட்டையை அடக்கிக்கொண்டு ஒற்றைத்தலைமையை போற்றி வளர்த்தால் பாட்டாளி மக்கள் கட்சி உயிர் பெரும். இல்லாவிட்டால் தலைவலி காரணமாக தைலாபுரத்திலேயே தைலம் தடவிக்கொண்டு படுத்துவிடும் என அரசியல் விமர்ச்சகர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சிக்கு அந்த சாதிக்காரனே எதிரியாக உள்ளனர். ஆதரிப்பது பாட்டாளி மக்கள் கட்சி. வாக்களிப்பது அவரவர்களுக்கு பிடித்த கட்சி அல்லது பணம் தரும் கட்சிக்கு வாக்களிப்பது. இதில் பிரிவினை வந்தால்……

ஏற்கனவே இதே பாட்டாளி சாதியை சேர்ந்த வேட்பாளர்கள் மற்ற பெரிய பெரிய கட்சிகளில் பதவிகளில் உள்ளனர். எனவே சாதி ஓட்டு நமக்கு மட்டும் என தப்பு கணக்கு போட்டு கூட்டணிக்கு தாவி கொண்டு இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி இருப்பதையும் இழக்காமல் இருக்க குடும்ப சண்டையை குஸ்தி சண்டையாக மாற்றாமல் இருக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்.

தந்தையும் மகனும் யோசிப்பார்களா?
தொண்டர்கள் எதிர் பார்ப்பு.

மக்களோ முதலில் உங்கள் குடும்ப பிரச்சினையையே தீர்க்க முடியவில்லை இதுல மக்கள் பிரச்சினையை எப்படி தீர்ப்பார்கள் என கூறுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button