
மாடாம்பூண்டி நான்கு முனை கூட்டு சாலையில் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொது மக்களுக்கு விபத்துகள் தடுக்க முன்னெச்சரிக்கை. தமிழக அரசு காவல்துறை எச்சரிக்கை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடம்பூண்டி நான்கு முனை கூட்டு நெடுஞ்சாலையில் தமிழ்நாடு அரசு ஆணைக்கிணங்க இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநராக பணி புரியும் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களிடம் காவல்துறையினர், சாலையில் கடந்து செல்லும்போது மது போதையில் பயணம் செய்யக் கூடாது என்பது குறித்தும், இருசக்கர வாகனங்களில் செல்லும் பயணிகள் தலையில் பாதுகாப்பு கவசம் அணிந்து செல்லும்படியும், மேலும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் பயணிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சீட் பெல்ட் அணிந்து அமரும்படியும், அறிவுறுத்தப்பட்டன. மேலும் சாலையில் கடந்து செல்லும் பொதுமக்கள் வாகனங்களை நோக்கி குறுக்கே செல்லக்கூடாது என்பது குறித்தும் தனது உயிரை பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் யாரும் மது போதையில் கடந்த செல்ல வேண்டாம் எனவும், மேலும் விபத்துகள் ஏற்படாமல் இருக்க பல்வேறு சிறப்பு நல்வழி ஆலோசனைகள் குறித்து 03/06/ 2026 அன்று பொதுமக்களிடையே அறிவுறுத்தப்பட்டது.மேலும் தார் சாலையில் செல்லும் வாகனப் பயணிகள் அனைவரும் தார் சாலையில் அமைத்திருக்கும் வேகக்கட்டுப்பாட்டு தடை கேட்டுகளை முறையாக பயன்படுத்தப்படும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்ச்சி திருப்பாலபந்தல் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது, மேலும் இந்நிகழ்ச்சியில் திருப்பாலபந்தல் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு காவல் பணியாளர்களும் உடன் இருந்தனர்,
மதராசபட்டினம்,
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் எஸ்..சிவலிங்கம்..





