
FCRA திருத்த மசோதாவை எதிர்த்தது தமிழ்நாடு சட்டமன்றம்!
FCRA திருத்த மசோதா 2026-ஐ திரும்பப் பெறுக! தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றம்
FCRA திருத்த மசோதா 2026 தொடர்பான முக்கியத் தீர்மானம் ஒன்று இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவை அதன் தற்போதைய வடிவில் திரும்பப் பெறுமாறு மத்திய அரசை சட்டமன்றம் வலியுறுத்தியுள்ளது.

பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் ஆட்சி மொழி, தமிழ் கலாச்சாரத் துறை அமைச்சர் ராஜமோகன் இத்தீர்மானத்தை முன்மொழிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மசோதாவில் உள்ள சில புதிய விதிகள் குறித்து தமிழ்நாடு அரசு சட்டமன்ற உறுப்பினர்களின் கவலை பதிவு.
குறிப்பாக, வெளிநாட்டு நிதியுதவி தொடர்பான விதிமுறைகளில் முன்மொழியப்பட்ட மாற்றங்களால் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.
FCRA பதிவு நடைமுறைகள், பதிவு ரத்து செய்யப்படுவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் சில சூழல்களில் சொத்துக்கள் மீதான தாக்கங்கள் குறித்து சட்டமன்றத்தில் கவலைகள் தெரிவிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
மத்திய அரசின் சட்டமியற்றும் அதிகாரம் மற்றும் கூட்டாட்சி உரிமைகளை கருத்தில் கொண்டு, இம்மசோதா குறித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை சட்டமன்றம் முன்வைத்துள்ளது.
இதற்கிடையில், பாஜக இம்மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, சட்டமன்றத்திற்குள் இவ்விவகாரம் அரசியல் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.
FCRA திருத்த மசோதா தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானம் இப்போது மத்திய அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்த கட்டத்தில் இம்மாசோதாவில் மாற்றங்கள் செய்யப்படுமா என்பது ஒரு முக்கிய கேள்வியாக உள்ளது.





