செய்திகள்

ராகுல் காந்தியை கைது செய்ததை கண்டித்து , காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் கட்சியினரால் மத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கைது செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்களில் கருப்புத் துணிகள் கட்டிக்கொண்டு மத்திய அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராகுல் காந்தியை கைது செய்ததை கண்டித்து

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் கட்சியினரால் மத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கைது செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்களில் கருப்புத் துணிகள் கட்டிக்கொண்டு மத்திய அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர்களின் உருவப்படங்களை எரித்து ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி வாணாபுரம் பகண்டை கூட்ரோட்டில் 22/07/2026 புதன்கிழமை அன்று அதிகாலை சுமார் ஒன்பது மணி அளவில் காங்கிரஸ் கட்சியினறால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியானது ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியும் ரிஷிவந்தியம் வட்டார காங்கிரஸ் கட்சி பொறுப்பாளருமான வட்டார காங்கிரஸ் தலைவர் கிருபானந்தம் தலைமையில் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அப்பா ராசு, வட்டார செயலாளர் அபிலாஷ், திருக்கோவிலூர் வட்டார தலைவர்கள் சற்குருநாதன், ஜெயக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் அய்யாசாமி, ரிஷிவந்தியம் நகர காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், ஆகியோர்களின் முன்னிலையில் மோடி அரசை கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் டெல்லியில் காங்கிரஸ் கட்சியினரின் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களை காவல்துறையின் கொடுமையான தாக்கலை நடத்த தூண்டுதல் செய்த நரேந்திர மோடி, மற்றும் அமித்ஷா, ஆகியவர்களின் உருவ படங்களை எரித்து மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி இவ்வாற்பாட்டம் நடைபெற்றது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார துணைத் தலைவர்கள் குப்புசாமி, ஏழுமலை, வட்டார அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சேரந்தாங்கல் சிவலிங்கம், வட்டாரப் பொதுச் செயலாளர்கள், சக்கரவர்த்தி, ஹரி கிருஷ்ணன், தேவராஜ், கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், முருகன், காசி, மற்றும் அண்ணாமலை, குமாரசாமி, சுப்பிரமணி, மூப்பன், ஆகியோர்களுடன் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் பெருந்திரளாக இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

எஸ். சிவலிங்கம்.
தீச்சுடர், நிருபர்.
ரிஷிவந்தியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
அழகு குறிப்புகள்: முகம் பொலிவாக இருக்க 7 எளிய Skin Care Tips முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக இதசெய்ங்க வங்கி முன் எலும்புக்கூடு Odisha அதிர்ச்சி சம்பவம்! பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி | Muslim Style Chicken Biryani Tamil டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி