Lifestyleஆரோக்கியம்

தலையில் ஏற்படும் புண், அரிப்பு, பேன், பொடுகு என அனைத்தும் சரியாக…

மருத்துவம் அது மகத்துவம்

தலையில் ஏற்படும் புண், அரிப்பு, பேன், பொடுகு என அனைத்தும் சரியாக…

தேவையான பொருட்கள்

1. மருதாணி இலை – 1 கைப்பிடி
2. வேப்பிலை – 1 கைப்பிடி
3. சிவனார் வேம்பு – 1 கைப்பிடி
4. கோரை கிழங்கு – 1 சிறியது
5. செம்பருத்தி பூ – 5
6. எலுமிச்சை தோல் – 5

செய்முறை

மேற்கூறிய அனைத்தையும் நாட்டு மருந்து கடைகளில் வாங்கி கொள்ளுங்கள்.

வாங்கிய மூலபொருட்கள் அனைத்தையும் நன்கு வெயிலில் காயவைத்து கொண்டும் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள்.

இந்த பொடியானது தேவைக்கு மட்டும் அரைத்து கொள்ளுங்கள் போதும்.

பயன்படுத்தும் முறை

மேலே கூறியபடி தயார் செய்த பொடியை தலைக்கு தேவையான அளவு எடுத்து தண்ணீர் கலந்து பசை போல குழப்பி தலை முடியில் தேய்த்து நன்கு ஊற வைத்து காய வையுங்கள்

நன்கு காய 1 மணி நேரம் இடைவெளி விடவும் பிறகு தலைக்கு குளிக்கவும்.

இதில் சீகக்காய் அல்லது ஷாம்பூ பயன்படுத்தி குளிக்கலாம்.

பயன்கள்

மேற்கூறிய பொடியை வாரம் 2 முறை பயன்படுத்தலாம்

தொடர்ந்து எடுப்பதால் தலை முடிக்கு நல்லதே.

இதனால், பேன், இளநரை, அரிப்பு, புண்கள், கண் எரிச்சல், முடி உதிர்வு ஆகியவை நீங்கி முடிக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்

இது ஆண் பெண் மற்றும் குழந்தைகள் என அனைவருக்கும் ஏற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்