அரசியல்உலகம்செய்திகள்தமிழகம்மற்றவைமாநிலம்

கொளுத்தும் வெயிலிலும் இருசக்கர வாகனத்தில் திமுக வேட்பாளர் வசந்த கார்த்திகேயன் தீவிர பிரச்சாரம்

ரிஷிவண்டி தொகுதியில் கிராமம் தோறும் சுற்றுப்பயணம் – மக்கள் உற்சாக வரவேற்பு, 100 கோடி ரூபாய் அணைக்கட்டு வாக்குறுதி

கொளுத்தும் வெயிலிலும் இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம்: ரிஷிவந்தியம் வசந்த கார்த்திகேயன் தீவிர வாக்கு சேகரிப்பு

 

வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவண்டி தொகுதி பகுதியில் திமுக வேட்பாளர் மற்றும் தற்போதைய எம்எல்ஏ வசந்த கார்த்திகேயன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இருசக்கர வாகனத்தில் சென்று வீதி வீதியாக மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். vlcsnap 2026 04 16 10h44m10s237 கொளுத்தும் வெயிலிலும் இருசக்கர வாகனத்தில் திமுக வேட்பாளர் வசந்த கார்த்திகேயன் தீவிர பிரச்சாரம் Theechudar

இந்த பிரச்சாரத்தின் போது கா. பன்னீர்செல்வம் வாகனத்தை இயக்க, வேட்பாளர் நேரடியாக பொதுமக்களை சந்தித்து ஆதரவை கோரினார்.

ஜெம்பை, காங்கியனூர், மேலந்தல் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்து, கரகாட்டம் ஆடி, மலர் தூவி வேட்பாளரை வரவேற்றனர்.

மேலும், அப்பகுதி மக்களுக்கு சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பெரிய அணைக்கட்டு திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதாக வசந்த கார்த்திகேயன் வாக்குறுதி அளித்தார்.

vlcsnap 2026 04 16 10h44m57s275 கொளுத்தும் வெயிலிலும் இருசக்கர வாகனத்தில் திமுக வேட்பாளர் வசந்த கார்த்திகேயன் தீவிர பிரச்சாரம் Theechudar

இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி | Muslim Style Chicken Biryani Tamil டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்